தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
காய்ச்சல், சளி மற்றும் அடிக்கடி தொண்டை வலியால் அவதிப்பட்டு வருபவர்கள் வீட்டு வைத்தியமே போதும் என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனேனில் இது போன்ற அறிகுறிகள் டான்சில்ஸ் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
இதில் இரண்டு வகை உள்ளது. திடீர் டான்சில் வீக்கம் மற்றும் நாட்பட்ட டான்சில் வீக்கம். திடீர் டான்சில் வீக்கத்திற்கு தலைவலி, சளி, காய்ச்சல், தொண்டை வலி, காது வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். இதே நாட்பட்ட டான்சில் வீக்கத்திற்கு சளி, காய்ச்சல் போன்றவை நிரந்தரமாகிவிடும். எடை குறைப்பு, பசிக்காது.
மேலும் காது கேட்பதில் சிரமம் ஏற்படலாம். இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். ஆகையால் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய இந்த நோயை புறக்கணிக்காதீர்கள்.