சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைபட்டிபுதூர் கிராமத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜய் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.