Categories
மாநில செய்திகள்

தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில்…. தளர்வுகள் வேண்டாம் – மருத்துவ வல்லுநர் குழு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது. இதில் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் வேண்டாம் என்றும், வணிகர்களுக்கும் 60 மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |