இஸ்ரேல் நாட்டில் இருந்து வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 7 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மிக குறைந்து வருகிறது. இது கொரோனா தடுப்பூசியின் பலனாகவே நிகழ்ந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே காணப்படுகிறது. அதேசமயம் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவாமல் இருப்பதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அது என்னவென்றால் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு பயணம் செய்யவோ அல்லது இஸ்ரேலிலிருந்து கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், எத்தியோப்பியா, மெக்சிகோ மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடனான பயண தடையை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இஸ்ரேல் மக்கள் இந்த மேற்கூறிய 7 நாடுகளுக்கும் பயணம் மேற் கொள்வதற்கும் அது அந்த நாடுகளில் இருந்து மீண்டும் இஸ்ரேல் வருவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயண தடையானது நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் வரும் எனவும் அடுத்த 13 நாட்களுக்கு இது கடைபிடிக்கப்படும் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.