Categories
மாநில செய்திகள்

தொற்று ஏற்பட்டால் அச்சப்பட தேவையில்லை…. எவ்வாறு கையாளவேண்டும்…. விளக்கம் அளிக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!

ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவையில் நடைபெற்ற விவாதத்தில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ” ஒமைக்ரான் எனும் புதிய வைரஸ் நாடு முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், தொற்றுக்கு ஆளாவோருக்கு சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்
“உலகம் முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 25. 40 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இருந்தாலும் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாவோர் 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருந்தாலே போதும். தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Categories

Tech |