நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதற்கு மத்திய அரசால் மருந்துகளும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமன்த் சோரன் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று நோயாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றுநோயாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.