நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மகாராஷ்டிராவில்கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10%க்கு மேல் உள்ளதால் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விலக்கப்படாது எனவும், தொற்று பரவல் குறைந்த மாவட்டத்திற்கு தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.