ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து இவர் தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வடச்சென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட ‘பூமிகா’ திரைப்படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார் .
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் பூமிகா திரைப்படத்தை நேரடியாக டிவியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த படம் டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏற்கனவே மண்டேலா, புலிக்குத்தி பாண்டி, ஏலே, வணக்கம் டா மாப்ள, வெள்ளை யானை போன்ற பல திரைப்படங்கள் நேரடியாக டிவியில் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.