டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சி.ஐ.ஐ மாநாட்டில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் அபூர்வ சந்திரா பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. மேலும் 60 கோடிக்கும் அதிகமான அறிதிறன் பேசி பயனாளர்களும், 80 கோடி அகன்ற அலைவரிசை பயனாளர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் கைபேசி நேரடி ஒளிபரப்பு நடைமுறை அறிமுகம் செய்வது தொலைக்காட்சி ஊடக பார்வையாளர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக அமைகிறது.
இந்த கைப்பேசி நேரடி ஒளிபரப்பு நடைமுறை கான்பூர் ஐ.ஐ.டி மற்றும் சங்கீதா ஆய்வகம் சார்பாக பெங்களூரில் முதல் கட்ட ஆய்வு நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட ஆய்வானது டெல்லிக்கு அருகே உள்ள பகுதிகளில் அல்லது நொய்டாவில் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து டி.ஆர்.பி ரேட்டிங் புள்ளிகள் மோசடி புகார் தொடர்பாகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.