Categories
மாநில செய்திகள்

தொலைதூரக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தொலைதூரக் கல்வி மாணவர்கள் அபராதம் செலுத்தி உரிய சான்றிதழ்களை பெறலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த விட்டாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

எனவே இதுவரை கல்வி கட்டணம், தேர்வுக் கட்டணத்தை கட்டாதவர்கள் அபாரதத்துடன் கட்டணத்தை செலுத்தி தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத நிலையில் இனியும் அவற்றை செலுத்தாமல் இருந்தால் மேற்கொண்டு அவர்கள் தேர்வு எழுதவும், படிக்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |