Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வி விவகாரம்…. விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்…. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

தொலைதூர கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூர கல்வி மூலம் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ஆம் ஆண்டிற்கு பின் தொலைதூர கல்வி மூலம் இங்கு வழங்கப்படும் பல்வேறு பட்டப் படிப்புகளுக்கான அங்கீகாரம் இல்லை என அறிவித்துள்ளது. அதன் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு பல்கலைக்கழகம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை பல்கலைகழகத்தின் பதிவாளர் தற்போது சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலமாக இயக்கம் மூலமாக 2015ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு வகையான படிப்புகள் நடத்தப்பட்டு இருக்கின்ற நிலையில் இந்த படிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டிருப்பது பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விரைவில் பல்கலைக்கழகம் ஆணைக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என கூறபட்டிருக்கிறது.

Categories

Tech |