பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர பட்டப்படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
அதேசமயம் முன்னனுமதி பெறாமல் தொலைதூர கல்வி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக் கழகத்திடம் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது . இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.