மிகவும் பிரபலமான சந்தையில் தாயுடன் சென்ற இரண்டரை வயது சிறுவன் டிலான் ஜூன் மாதத்தில் மாயமானதில் அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவில் கிறிஸ்டோபல் என்ற சந்தையில 2 1/2 வயதுள்ள டிலான் ஜூன் என்ற சிறுவன் மாயமனதை அடுத்து தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சந்தையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய காவல்துறையினர் அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருடன் சிறுவன் நடந்து செல்வது பதிவாகியிருந்தது.
அதன் பின் முடுக்கி விடப்பட்ட இந்த விவகாரத்தின் துவக்கத்தில் காவல்துறையினர் குடியிருப்பு ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த குடியிருப்பில் மூன்று குழந்தைகளுடன் இரண்டு வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 20 சிறுவர்களை போலீசார் மீட்டுள்ளனர். உடல் மற்றும் உளவியல் ரீதியாக துன்புறுத்தி ஒரு கும்பல் இந்த சிறுவர்களை பிச்சை எடுக்க வைப்பதாக தெரிய வந்துள்ளது இந்த விவகாரம் தொடர்பில் தற்போது 3 பெண்களை போலீசார் கைது செய்தனர் இருப்பினும் இதுவரை சிறுவன் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தரப்பில் தெரியவருகிறது.