தேனியில் கடன் பிரச்சினைக்காக மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியில் சுருளி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுருளி அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதில் முத்துலட்சுமிக்கு ஏற்கனவே சக்திவேல் என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுருளிக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே கடன் தொல்லையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தனது மகன் சக்திவேலுக்கு முதலில் சாப்பாட்டுடன் அரளி விதையை கலந்து கொடுத்துவிட்டு பின்பு விஷம் கலந்த சாப்பாட்டினை தானும் உண்டதால் இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்கள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.