Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவர்களுக்கு…. கலெக்டர் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு…!!

தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்ததாவது, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கபட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 200 மாணவ- மாணவிகளுக்கு படிக்கின்ற காலத்தில் ஏதாவது ஒரு வருடம் ஒரு முறை ரூ 50,000 கொடுக்கப்படுகிறது.

இந்த நிதி உதவி பெறுகின்ற மாணவர்களின் குடும்ப வருட வருமானம் ரூ 72 ஆயிரத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. மேலும் தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அனைத்தும் வைத்திருக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவி பெறுவதற்கு 10 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. கல்வி உதவி தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் படித்து வந்தாலும் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள். மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை உரிய ஆவணங்ளுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தனித்துணை கலெக்டர் அலுவலகத்தில் வேலை நாள்களில் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |