தமிழகத்தில் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க, 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார். dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி உரிய தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.