கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள பன்னி அள்ளி பகுதியை அடுத்த கிராமத்தில் தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வெளியே உள்ள பகுதியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தொழிற்சாலையின் உள்ளே இருந்து திடீரென புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை அடுத்து தொழிற்சாலை தொழிலாளர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த இயலவில்லை இதனையடுத்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.