உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிரோசா பாத் மாவட்டம் ஜஸ்ட்ரானா பகுதியில் உள்ள படா நகரில் இன்வெர்ட்டர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் மற்றும் 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.