பிரித்தானியாவில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையிலிருந்து போலீசார் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
பிரித்தானியாவின் லஞ்சஷிர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை தட்டியுள்ளனர். மேலும் கதவு திறக்காததால் அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அங்கே கிலோ கணக்கில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை என்று கூறிக்கொண்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பிரித்தானியாவிற்கு கடத்தி வந்துள்ளனர். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் கஞ்சாவை பதுக்கி வைத்து அவர்கள் ஏற்றுமதி செய்து வந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் தொழிற்சாலைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் தொழிற்சாலையில் கிடைத்த பொருட்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி பத்ருல் ஆலம்,இஸ்மாயில் அஹமத், மற்றும் யாமின் பட்டேல் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொழிற்சாலையில் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 3.25 மில்லியன் பவுண்டுகள் இருக்குமென தெரியவந்துள்ளது.