தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தொழில் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் முதல்வர் ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்கிறார்.
தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவு பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. தொழில் படிப்புகளில் உள் ஒதுக்கீடு அளிப்பதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா என குழு ஆய்வு செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலாக வாய்ப்புள்ளது.