தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் நோக்கத்தை செயல்படுத்த மாவட்ட, மாநில அளவில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு அரசின் முக்கிய பணி மக்களை காப்பது தான். பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற் பேட்டைகளை உருவாக்க வேண்டும் என்றும், வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.