தொழிலதிபரிடம் 1 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் பசந்த் சோனி என்பவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த மனோகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மனோகரனும், பசந்த் சோனியும் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலதிபர் மனோகரனை தொடர்பு கொண்டு தனக்கு ஜவுளி அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அதன் முன்பணமாக பல்வேறு தவணைகளாக 1 கோடியே 86 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் வரை மனோகரனின் வங்கி கணக்கிற்கு சோனி அனுப்பியுள்ளார்.
ஆனால் கூறியபடி மனோகரன் ஜவுளி அனுப்பி வைக்கவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் அவர் முறையாக பதிலளிக்காததால் சோனி பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் பணத்தையும் கொடுக்கவில்லை. இது குறித்து சோனி கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மனோகரன் அவரது மனைவி சிவகாமி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.