உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜெராக்ஸ் கடை நடத்திவரும் தொழிலதிபருக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்துள்ளது.