Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபருடன் இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி.‌.. இணையத்தில் வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பிரபல பாடகி சுனிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகி சுனிதா தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். தமிழிலும் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் சில பாடல்கள் பாடியுள்ளார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவருக்கு 19 வயதிலேயே திருமணம் நடைபெற்று ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஸ்ரேயாவும் பாடகியாக உள்ளார். கடந்த சில மாதங்களாகவே பாடகி சுனிதா இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் பாடகி சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழிலதிபர் ராம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

அதில் ‘ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளின் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தான் கனவு காண்பார்கள் . நானும் அது போன்று தான் கனவு காண்கிறேன் . ஆனால் அற்புதமான சிந்தனை கொண்ட குழந்தைகளை நான் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு முக்கிய தருணம் வந்து விட்டது. என் வாழ்க்கையில் நண்பராகவும் சிறந்த பார்ட்னராகவும் ராம் அவர்கள் நுழைந்துள்ளார். நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறோம். எங்களுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |