கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 63 வயது தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி காந்திபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட ரவுடி கும்பல் அவர்கள் தங்கி இருந்து அறைக்குள் அத்துமீறில் நுழைந்தனர். அப்போது அவர்கள் தொழில் அதிபரையும் அந்த பெண்ணையும் மிரட்டி இரண்டு பேரையும் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை காட்டி இதனை உங்கள் குடும்பத்திற்கு அல்லது வெளி உலகத்தினருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம் தரவேண்டும் என்று மிரட்டி உள்ளார். தற்போது என்னிடம் பணம் இல்லை எனத் தொழிலாளர் கூறியுள்ளார். உடனே அவர்கள் கையில் இருந்த ரூ.1000 மற்றும் ஏடிஎம் கார்டை பறித்துக் கொண்டு நாங்கள் கேட்கும் போது எங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனையடுத்து தொழில் திபர் அருகில் உள்ள காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரில் தொழில் அதிபருடன் தங்கி இருந்த பெண்ணுக்கும் அந்த மோசடி கும்பலுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தொழில் அதிபரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த அந்த பெண் சரியான நேரம் பார்த்து அந்த கும்பலை அங்கு வரவழைத்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தொழில் அதிபருடன் வந்த அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. அந்த பெண்ணை பிடித்தால் உண்மை வெளியே வரும் என்று போலீசார் நம்புகின்றனர். இதனால் அந்த பெண்ணை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை எடுத்து ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளின் உருவம் பதிவாகியுள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி கும்பல் இதனைப் போல பல தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்திருக்கலாம் என்று சந்தேகித்து, போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்