Categories
உலக செய்திகள்

தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்… ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத் தலைவர் கைது…!!!!

கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கத்தார் பணபலத்தை பயன்படுத்தி ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசியல் முடிவுகளை எடுப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை கத்தார் அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை கர்த்தார் நாட்டில் லஞ்சம் பெற்றதாக கூறி பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உள்பட 16 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சுமார் 6 லட்சம் யூரோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கிடையே எவா காயிலி ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |