Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளர்களுக்கு பணி …. ஆலையின் உரிமம் ரத்து …. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளர்களை  அதிக நேரம் பணியில் அமர்த்திய  பட்டாசு ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் அய்யாதுரையின் பட்டாசு ஆலையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், தாசில்தார் சுந்தரமூர்த்தி ஆகியோரும் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஆய்யிவில்  பட்டாசு வெடித்து தீ பிடித்துள்ளது. மேலும் அய்யாத்துரை தொழிலாளர்களை அதிக நேரம் பணியில் அமர்த்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |