Categories
மாநில செய்திகள்

தொழிலாளர்களுக்கு 50% ஊதிய உயர்வு…. பிரபல நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

பெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் வருகின்ற தை மாதம் முதல் இது அமலுக்கு வரும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டிசம்பர் மாதம் முதல் திரைப்படத் தொழில் சீரடைந்து வந்ததாகவும், வலிமை, ஆர் ஆர் ஆர் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தால் நிலைமை மேலும் சீராகி இருக்கும் என்றும் கூறினார். மேலும் பெரிய நடிகர்களிடம் மீண்டும் மீண்டும் சம்மேளன ஊழியர்களுக்காக நிதி உதவி கேட்பதற்கு தர்ம சங்கடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |