சென்னையில் 68 வது மாநில தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தொழிலாளர்களுக்கான குறைகளை இணையதளம் மூலம் தெரிவித்து தீர்வு பெறும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி பி கணேசன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தொ.மு.ச உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
வேலை அளிப்போர் மற்றும் தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் பல்வேறு நிறுவனங்கள் தொழில்கள் தொழிற்சாலைகள் தோட்ட நிறுவனங்கள் போன்றவற்றின் செயல்பாட்டில் தோன்றக்கூடிய பிரச்சனைகள் போன்றவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தொழிலாளர் நலத்துறையின் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் தொழிலாளர் துறையின் கீழ் பதினெட்டு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வாரியங்களில் உள்ள உறுப்பினர்கள் தங்களுக்கான குறைகளை இணையதளம் வாயிலாக தெரிவிக்கும் வசதியை அமைச்சர் சி வி கணேசன் தொடங்கி வைத்துள்ளார்.