பெண்ணை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெருமானேந்தல் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். நண்டு கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிக்கும் அவருடன் வேலை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து சம்பவத்தன்று பாலமுருகன் பாண்டியின் மனைவி வள்ளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன் வள்ளியை தகாத வார்த்தையில் பேசியதோடு மட்டுமல்லாமல், அவர் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வள்ளி தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.