கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிபாறைஎஸ்டேட் பகுதியில் கூலித்தொழிலாளியான தங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அவர் இஞ்சிபாறை எஸ்டேட் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது புதரில் இருந்து வெளியே வந்த கரடிகள் தங்கத்தை தாக்கியது.
இதனால் தங்கம் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கரடிகளை விரட்டியடித்தனர். இதனை அடுத்து படுகாயமடைந்த தங்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இஞ்சி பாறை எஸ்டேட் பகுதியில் கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.