Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. சித்தியே செய்த கொடூரம்….!!

சொத்து தகராறில் சித்தியும், சகோதரனும் இணைத்து தொழிலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எ. காமாட்சிபுரம் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் குப்பைத் தொட்டியில்  கிடந்த பிணத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் எ.காமாட்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கூலி தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செந்திலின் தந்தை சிங்காரவேலனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாகவும், அதில் மூத்த மனைவிக்கு பிறந்தவர்தான் செந்தில்.

மேலும் சிங்காரவேலனின் 2-வது மனைவி ரத்தனகிரிக்கு செல்வக்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ரத்தினகிரிக்கும் செல்வத்திற்கும் ஏற்கனவே சொத்துதகராறு இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வம் தனது சொத்துக்களை விற்பனை செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரத்தனகிரி தனது மகன் செல்வக்குமார் மற்றும் அவரது நண்பர் செந்தில் மற்றும் லோகநாதன் ஆகியோருடன் இணைத்து செல்வத்தின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த செல்வத்தின் உடலை பெட்ரோலை ஊற்றி எறிந்துவிட்டு அப்பகுதியில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக ரத்தினகிரி, செல்வக்குமார், செந்தில் மற்றும் லோகநாதன் ஆகிய 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |