மதுரை பீ.பிகுளம் பிடி ராஜன் சாலை பகுதியில் வசிக்கும் மலைராஜன், தங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஈஸ்வரன். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு போலீசார் மதுபாட்டில்கள் உள்ளதா என சோதனையிட வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஈஸ்வரனை போலீஸார் நடுரோட்டில் வைத்து தாக்கியதாக தாயார் கூறினார்.
இதனால் ஈஸ்வரன் தீக்குளித்துள்ளார். இதனை தொடர்ந்து தீக்காயங்களுடன் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னை காவலர் துறையினர் துன்புறுத்திய தோடு, பணம் கேட்டதாகவும் பொய் வழக்கு செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.