Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை” …..போலீசார் விசாரணை….!!!!

முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் அருகே இருக்கும் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரின் மனைவி ஆவுடையார். முருகையா நேற்று முன்தினம் மனைவி மகள்களுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பிருகின்றார்.

இந்நிலையில் அவர் திடீரென வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் முருகையாவின் வீட்டின் கதவை உடைத்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

Categories

Tech |