Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி வெட்டி படுகொலை….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி கிராமத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். கூலி தொழிலாளியான மாயாண்டி கலியாவூர் செல்லும் சாலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற போலீசார் மாயாண்டியின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் சுடலைமாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் மாயாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் மாயாண்டியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி தீவிரமாக தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |