வைர வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதி பகுதியில் வைர வியாபாரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனிவாசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த சீனிவாசன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.