Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்… விசைத்தறி உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த விசைத்தறி உரிமையாளர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வெடியரசம்பாளையம் நவக்காத் பகுதியில் கார்த்திகேயன் வசித்துள்ளார். விசைத்தறி உரிமையாளரான இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிந்துஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் கிடைக்காமல் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கார்த்திகேயன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி வெளியில் சென்ற கார்த்திகேயன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சிந்துஜா தனது கணவரை தேடித் தரும்படி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கார்த்திகேயனை தேடி வந்துள்ளனர். இதற்கிடையே ஓடப்பள்ளி கதவணை பகுதியில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதாக கதவனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் 2 தினங்களுக்கு முன்பு காணமல் போன கார்த்திகேயன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விரக்தி அடைந்தகார்த்திகேயன் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |