Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டுதுறை கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை  வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில்  திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில்  விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட  சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |