கொடூரமான முறையில் வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே கண்ணனூர் பருத்தி பகுதியில் அனீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டயருக்கு ரீ பட்டன் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இதுதொடர்பாக அனிஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக மணி தனது மருமகன்கள் சசி, செல்வின், அன்னாள் மற்றும் வசந்தா ஆகியோருடன் அனிஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அனிஷை கத்தியால் சரமாரியாக குத்தி பலமாக தாக்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அனிஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து திருவட்டார் காவல்நிலையத்தில் அனிஷ் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணி மற்றும் சசி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.