Categories
தேசிய செய்திகள்

தொழிலில் நஷ்டம்….. “சிறுமியின் வாயில் குங்குமத்தை திணித்து நரபலி”…. பெரும் கொடூரம்….!!!!

ஆந்திர மாநிலம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு தனது 3 வயது மகள் புணர்விகாவை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜைக்குப் அழைத்துச் சென்றார்.

பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர். இதனால் பயந்து ஓடிப் போன சிறுமி கூச்சலிட்டார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாயில் குங்குமம் திறக்கப்பட்டதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |