பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கா நகரில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகைப்படக் கலைஞரான பாலமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் தனது தாய் அன்னலட்சுமியிடம் திருச்சி சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அன்னலட்சுமி தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அன்னலட்சுமி அப்பகுதியில் இருக்கும் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். யாரும் இல்லாத அந்த வீட்டில் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அன்னலட்சுமி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பாலமுருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.