Categories
தேசிய செய்திகள்

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு……!!!!!!

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். உக்ரைனிலிருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிலுள்ள தொழில்நுட்பம் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க அகிலஇந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலானது வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது குறித்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து அகிலஇந்திய தொழில்நுட்பகல்வி கவுன்சில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில் “உக்ரைனிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் பயின்று வந்த 20,000 இந்தியமாணவர்கள் போர் காரணமாக பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் உக்ரைனில் அந்த மாணவர்கள் எந்த தொழில் நுட்ப பாடப்பிரிவு மற்றும் ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதே மட்டத்தில் அவர்களை சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன் காலி பணியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப  படிப்பைத் தொடர அவர்களை அனுமதிக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பு உருவாகியுள்ளது.

Categories

Tech |