தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர், சென்னை விமானங்கள் தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மாலை 6.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும். ஆனால் நேற்று இரவு 4 மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதுபோலவே இரவு 8.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய இண்டிகோ விமானம் இரவு 10.25க்கு தாமதமாக வந்தடைந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாக வந்தது. இதனால் விமானங்களில் பயணித்தவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.