சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளக்கூடிய இணையத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று காலை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஒரே நேரத்தில் மாணவர்கள் ஏராளமானோர் அதற்காகக் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய வெப்சைட்டை லாக்கின் செய்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
எனவே இதன் காரணமாக நிறைய மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுவதால் பதற்றமடைய வேண்டாம் எனவும், 2 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் என்பது அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அதனை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.