தாய்லாந்தில் திருடச் சென்ற நபர் ஒருவர் ஏசியை போட்டு தூங்கியதால் வீட்டின் உரிமையாளரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
தாய்லாந்தை சேர்ந்தவர் அதித் கின் குந்துத் (22 வயது). இவர் திருட்டு தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அதித் கின் குந்துத் காவல்துறை அதிகாரி ஒருவரது வீட்டிற்கு திருட சென்றுள்ளார். மேலும் இரவு 2 மணிக்கு அப்பகுதிக்கு சென்ற இவர் ஜன்னல் வழியாக வீட்டினுள் நுழைந்து பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருள்களை போன்றவற்றை தேடித் தேடி திருடியுள்ளார்.
இதனால் மிகுந்த சோர்வுற்ற அவர் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக தனியாக இருந்த அறையில் ஏசியை போட்டுகொண்டு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் சீக்கிரமாக எழுந்து வந்த காவல் அதிகாரி யாரும் இல்லாத அறையில் ஏசி வேலை செய்வதை கண்டு சந்தேகம் அடைந்து அந்த கதவை லேசாகத் திறந்து பார்த்துள்ளார்.
அப்போது திருடன் மெத்தையில் படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அதித் கின் குந்துத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.