Categories
மாநில செய்திகள்

தொழில் தொடங்க போறீங்களா…. வெறும் 30 நிமிஷத்துல பணம் கிடைக்கும்….!! முழு விபரம் இதோ….!!

வெறும் 30 நிமிடத்தில் தொழில் தொடங்குவதற்கான கடன் பெறும் வசதியை பெடரல் பேங்க் அறிவித்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கு உடனடியாக கடன் பெறும் வசதியை ஃபெடரல் வங்கி தொடங்கியுள்ளது. இதற்காக இணையதள சேவை ஒன்றை அந்த வங்கி தொடங்கியுள்ளது. எனினும் கடனுக்கு ஒப்புதல் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கும். கடனுக்கான டாகுமெண்டேஷன் பணிகளை முடிக்க பெடரல் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். டாகுமெண்டேஷன் முடிந்தபின் கடனை பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 30 நிமிடங்களுக்குள் கடன் பெற முடியும். ஆன்லைனிலேயே வங்கிக் கணக்கு அறிக்கை, வருமான வரிக் கணக்கு பதிவேற்றம், ஜிஎஸ்டி தகவல்கள் சரிபார்ப்பு என எல்லா வேலையும் முடிந்துவிடும்.தகுதியான நிறுவனங்கள் இந்த இணையதளம் வாயிலாக 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். ஆகவே, சிறு, குறு, நடுத்தர தொழில்களை நடத்துவோர் வங்கிக் கிளைக்கு சென்று அலையாமல் ஈசியாக வீட்டில் இருந்தபடியே பெடரல் வங்கியின் இணையதளம் மூலம் கடனுக்கு ஒப்புதல் வாங்கிய கொள்ளலாம்.

Categories

Tech |