Categories
மாநில செய்திகள்

தொழில் வரி செலுத்தாத கடைகள்…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

 வரி செலுத்தாத கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி  சீல் வைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவைகள்  குடியிருப்பு வீடுகளாகவும், வணிகப் பகுதிகளாகவும் கணக்கிடப்படுகிறது. மேலும் மாநகராட்சியின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி என ஆண்டுக்கு இருமுறை வசூலிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில்  ரிச்சி, நயினியப்பன் தெருவுகளில் இயங்கி  வந்த 85-க்கும் மேற்பட்ட   கடைகளின் உரிமையாளர்கள்  தொழில் வரி செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வரியை செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |