Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழில் விஷயமாக வந்த வாலிபர்….. திடீரென நடந்த சம்பவம்…. சென்னையில் பரபரப்பு….!!

ராட்சத அலையில் சிக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பழைய துணிகளை வாங்கி விற்கும் வியாபாரியான சாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய துணிகள் வாங்குவதற்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் சாய் தனது நண்பர்களான ஹரி மற்றும் கோபால் ஆகியோருடன் இணைந்து எழிலகம் எதிரிலிருக்கும் மெரினா கடற்கரையில் குளித்து கொண்டிருந்தார். இதனை அடுத்து ராட்சத அலை சாயை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு சாயின் உடல் அப்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |