Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- அம்பூர் பேட்டை பகுதியில் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு சரவணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது‌. இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவர் ச பசுபதி ஆய்வு செய்துள்ளார். அப்போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி தொடர் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Categories

Tech |