Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகள்”…. மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் இறப்பு…

மர்ம விலங்குகள் கடித்ததில் 8 ஆடுகள் இறந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்திருக்கும் கே.பந்தாரபள்ளி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் திருப்பதி. இவர் 9 ஆடுகளை வளர்த்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று இரவு தொழுவத்தில் ஆடுகளைக் கட்டி வைத்தார்.

நேற்று காலையில் ஆட்டு தொழுவத்திற்கு சென்று பார்த்தபோது எட்டு ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அருகே சென்று பார்த்த பொழுது ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |